கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்கள் தலைமையில், (22.07.2026) காவல் துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வழக்குகளின் விசாரணை முன்னேற்றம், நீதிமன்ற நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விவரங்கள் மற்றும் காவல் துறை – நீதித்துறை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. J.ஆண்டனி பாபு




















