கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நாய்க்கனூர் அம்பேத்கர் நகரில் உள்ள குற்றவாளியின் வீட்டில் அருகே சென்று சோதனை செய்ததில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் இருந்தது. மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















