கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துளசி நகர் கோபச்சந்திரம் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, அவ்வழியாக வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் இருந்தது. மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















