கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நாகமங்கலம் கிராமத்தில் உள்ள எதிரி கடையின் பின்புறம் சோதனை செய்த போது சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானங்கள் இருந்தது. மதுபானங்களை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து வெளி மாநில மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















