கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 4 கிராம் எடையுள்ள ₹16,000/- ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் இருந்தது, வெளிமாநிலத்திலிருந்து போதை பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து போதைபொருட்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















