கோவை: கோவை கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில், “நஷா முக்த் யுவா – வளர்ந்த பாரதத்திற்கான போதையற்ற இளைஞர் சமுதாயம்” என்ற தலைப்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கோவை மாநகர காவல்துறையின் *உதவி ஆணையர் (Assistant Commissioner) சரவணன், *கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் (Inspector) கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி, போதைப் பழக்கத்திற்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைப் பொருட்களை முற்றிலும் தவிர்த்து, ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான இளைஞர் சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் திரளாக கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















