கோவை: கோவை மாநகர காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு. கார்த்திகேயன் அவர்கள், காவல் பணியில் ஆற்றிய சிறப்பான சேவை, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த செயல்திறனைப் பாராட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து உயரிய பதக்கத்தைப் பெற்றார். காவல்துறையின் பெருமையை உயர்த்தும் வகையில் இந்த விருதைப் பெற்றுள்ள திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு, காவல்துறை சகோதரர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். சிறப்பான பணிக்காக உயரிய அங்கீகாரம் பெற்றுள்ள திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும், மேலும் பல உயரிய சாதனைகளைப் படைக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















