திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் காவல்துறையினர் (11.04.26) அன்று ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித்(25). ஹைபீஸ் அகமது(20). பிலால்(26). வெள்ளத்துரை (32). ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா எண்ணெய், போதை பொருள்கள், சுமார் 5 கிராம் கஞ்சா உள்ளிட்டவற்றை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் நால்வரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















