திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், டாணா பகுதியை சேர்ந்த போக்ஸோ வழக்கு குற்றவாளி ஹரிஹரன் (25). இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், வனிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார், இ.கா.ப., பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், (18.04.2026) அன்று ஹரிஹரன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற செயல்கள் நடைபெறாமல் அதனை கட்டுப்படுத்தவும், நிகழாண்டில் மாவட்ட காவல்துறையினரால் இதுவரை 45 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















