திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஒரு மாதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.



















