தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பெருங்கோட்டூர் சண்முகையா மகன் முருகன் (57). மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவ் வழக்கின் விசாரணை தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று, வந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் துறையினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக்குமார் பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















