தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்நிலையில் ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் படி செங்குன்றம் மாவட்ட துணை ஆணையர் பாலாஜி மேற்பார்வையில் பொன்னேரி உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையில் பொன்னேரி காவல் ஆய்வாளர் தமிழன்பன் மற்றும் போலீசார் பொன்னேரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தகவல் அறிந்து பல குற்றவாளிகள் சென்னை ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளில் பதுங்கி இருந்த நிலையில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு கடந்த ஒரு வாரமாக 27 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது மக்களுக்கு இடையூறு , பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிரான குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொன்னேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பொன்னேரி காவல் உதவி ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என காவல் ஆய்வாளர் தமிழன்பன் தெரிவித்தார்.




















