திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பொன்னேரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் குற்றங்களை தடுக்கும் நோக்கோடு பொன்னேரி வேம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பிங்க் நிற பெண்கள் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பங்களிப்போடு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் எளிதாக காவல் துறையை அணுகி புகார் கொடுக்கும் வசதிக்காகவும் அச்ச உணர்வின்றி காவல் துறையை எளிதாக அணுகவும் பிங்க் நிறத்தில் இந்த பூத் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் காவல் துறையினர் 3 ஷிப்டுகளில் தலா 2 காவலர்கள் என இந்த பிங்க் உதவி மையத்தில் பணியாற்றுவார்கள் எனவும் அந்தப் பகுதியை சுற்றிலும் 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















