திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில்திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., அறிவுறுத்தல் படி சைபர் குற்றங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாநகர சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர், சுவாதிகா தலைமையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















