கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடைரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தவும் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த நடைரோந்து பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















