மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட பாடசாலை தோப்பு பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வார்டில் மோசமாக உள்ள பகுதியில் சாலை அமைக்காமல் ஏற்கனவே சாலை அமைத்த பகுதியில் மறுபடியும் சாலை அமைப்பதாக கூறி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெண்கள் சாலை மறியல் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அருகிலேயே சோழவந்தான் மார்க்கெட் உள்ள நிலையில் மார்க்கெட்டுக்கு செல்வதில் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் காவல்துறையினர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மோசமான நிலையில் உள்ள பகுதியில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள பகுதியில் சாலை அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையென்றால் தொடர்ந்து மறியலில் ஈடுபடுவோம் என கூறினர் இது குறித்து அதிகாரிககளிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதை அடுத்து மறியலைகைவிட்டு களைந்து சென்றனர் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அருகில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையம் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் நாளைக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தராவிட்டால் பகுதி மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பெரிய அளவில் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















