இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டார். முகாமில் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்து விரைவாக தீர்வு காணுமாறு உத்தரவிட்டார்.
மேலும், பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்வதன் மூலம்காவல்துறையின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு மனுவும் உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த குறைதீர்ப்பு முகாமில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை அளித்தனர்.



















