திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (30). இவர் கடந்த 27 ஆம் தேதி சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்ற பைக்கை மா்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதே போல, பட்டன்கல்லூர், ராஜீவ்காந்தி நகர், சிவசக்தி நகர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 6 பைக்குகள் வெவ்வேறு நாள்களில் திருடு போயின. இது குறித்து பெறப்பட்ட புகார்களின் பேரில் சுத்தமல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் மகன் இசக்கிராஜா (20). மானூர் பல்லிக்கோட்டையைச் சேர்ந்த முருகன் மகன் ரமேஷ்(19). ஆகிய 4 பேரை (31.05.2026) அன்று கைது செய்து அவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்


















