திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அனிஸ் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த சுமன் (25). என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவர் வழங்கிய தகவலின் பேரில் அவர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இடத்தில் புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. சம்பவம் குறித்து, பழவூர் காவல் நிலைய ஆய்வாளர், சுரேஷ்குமார் (பொறுப்பு பணகுடி காவல் நிலையம்) வழக்கு பதிவு செய்து சுமனை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 350 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















