திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் , ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கட்டளை, பால கணபதியாபுரம் சுப்பையா (42). என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையை சோதனை செய்து பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக , பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து காவல் ஆய்வாளர், சுபாஷ் வழக்கு பதிவு செய்து சுப்பையாவை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து சுமார் 4 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















