திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், வினுகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த கோவிலம்மாள்புரத்தை சேர்ந்த சுடலைகண்ணு (37). என்பவரை சோதனை செய்து பார்த்த போது, அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து களக்காடு காவல் ஆய்வாளர், கண்ணன் வழக்கு பதிவு செய்து சுடலை கண்ணுவை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















