திருச்சி: வருகின்ற (23.04.2026) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன. தேர்தல் நாளில் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பாக பேணப்படுவதற்காக காவல்துறையினர் முழுமையாக தயாராக உள்ளனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















