இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரை பகுதியில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட பத்மஸ்வரன், தினேஷ்குமார் மற்றும் அஜித் குமார் ஆகியோருக்கு தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய வில்லம்மாளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, மொத்தம் 39 சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முக்கிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் மேற்கண்ட தண்டனையை வழங்கியது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















