திருநெல்வேலி: திருநெல்வேலி, பேட்டை, திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் இசக்கிதுரை (35). டவுண், வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் மகன் சுந்தர்(31). இருவரும் சிறுமிகளை பாலியல் செய்த வழக்கில் கைதானவர்கள். இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க டவுண் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அளித்த பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர், மற்றும் மாநகர காவல் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப.. ஆணைப்படி (09.06.2026)-ஆம் தேதி இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















