திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழவேற்காடு கடற் பகுதியில் கடல் ஆமைகள் அதிகமாக மரணம் அடைந்து வருகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் மேற்கொண்டு வரும் நிலையில் மீனவர்களின் வலைகளில் கடல் ஆமைகள் சிக்கி இறப்பதும் படகு இஞ்சின்களில் பட்டு ஆமைகள் இறப்பதும் முட்டையிடுவதற்கு கடற்கரைக்கு வரும் ஆமைகள் தங்கள் வாழ்விடம் அறியப்படாமல் இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதிலிருந்து ஆமைகளை மீட்டெடுக்கும் பொருட்டு பழவேற்காடு வனத்துறை மற்றும் பறவைகள் சரணாலயம் துறை கடல் ஆமைகளை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பழவேற்காடு பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















