மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1984-1991கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு உள்ள கிரீன் பார்க் தங்கு விடுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை, முன்னாள் மாணவர் தமிழ் ஆசிரியர் ஞானமணி தொகுத்து வழங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் குருசாமி, புலவர் அழகர்சாமி, குலசேகரபாண்டி யன், கணபதி,காளியப்பன், சொக்கர், புலவர் வீரத்தேவர், அமிர்த பாக்கியம், சந்திரா பொன்னம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, மலரும் நினைவுகள் பற்றியும் அன்றைய இன்றைய கல்விமுறை பற்றியும் ஆசிரியர்கள் பேசினர். அதில் உங்கள்நாங்கள் ஆற்றிய கல்வி பணி முன்னேற்றத்திற்கு
வழி வகுத்துள்ளது.
உங்களால் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்.உங்கள் வாழ்த்து தான் எங்களை இன்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
இன்றளவும் பல மாணவர்கள் ஆசிரியர்களின் தொடர்பில் இருந்து ஆலோசனை கேட்டு வருகிறார்கள். இன்றைய மாணவர்களின் வாழ்வை தொலைக்காட்சியும் கைபேசியும் தான் அதிகம் சீரழிக்கிறது.நாங்கள் செல்லும் இடமெல்லாம் பல மாணவர்கள் நான் உங்களிடம் படித்தவன் என்று கூறும் போது, நாங்கள் எல்லையில்லா மகிழ்ச்சிய டைகின்றோம். நேர்மையாக உழைப்பது தான் நாம் மண்ணில் பிறந்தது பயன் தரும். 91வயதுக்கு பின்னும் உங்களை யெல்லாம் பார்க்கும் போது எங்களுக்குள் உற்சாகம் கிடைக்கின்றது இவ்வாறு அவர்கள் பேசினர். இதில், கலந்துகொண்டு நினைவு பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர் லட்சுமணன் கதர் ஆடை அணிவித்தார். இதன் ஏற்பாடு களை, முன்னாள் மாணவ ஒருங்கி ணைப்பாளர்கள் தினகரன், தயாநிதி, தமிழ்ச்செல்வன், பரந்தாமன் உள்படமாணவர்கள் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















