திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நள்ளிரவில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.4,68,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், எஸ்.எஸ்.ஐ. ரவிச்சந்திரன் மற்றும் தலைமை காவலர் பாலசுந்தரம் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு வாகனம் நிறுத்தி சோதனை செய்தபோது, பெட்ரோல் பங்க் உரிமையாளர் நாகராஜன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















