திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் DSP.சங்கர் தலைமையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், சார்பு ஆய்வாளர்கள் சித்திக், சரத்குமார் மற்றும் காவலர்கள் அஞ்சலி பைபாஸ் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது காரில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகேஷ்குமார்(23). என்பதும் திண்டுக்கல் அறிவு திருக்கோவில் அருகே ரோஸ் நகர் பகுதியில் குடோனில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் முகேஷ்குமாரை கைது செய்து 300 கிலோ புகையிலை பொருட்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















