திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சலி ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் ஒட்டி வந்த காரை சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்து அவரை கைது செய்து 300 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் காவல் நிலையத்தில் நேரில் பார்வையிட்டு சிறப்பாக பணி செய்த தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் சித்திக், சரத்குமார் காவலர்கள்.வேலுசாமி, வினோத், தியாகு வர்மன் கிளாடிஸ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். நிகழ்வில் புறநகர் காவல் துறை கண்காணிப்பாளர். சங்கர் மற்றும் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர்.வசந்தகுமார் உடன் இருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















