இராமநாதபுரம்: தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு, தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தல் காலத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன. அனைத்து காவல்துறையினரும் விழிப்புடன் செயல்பட்டு, சட்டம்-ஒழுங்கை உறுதியாக பேண வேண்டும் என்றும், தேர்தல் பணிகளை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.




















