திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தை பார்வையிட்டு, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகள் குறித்து போலீசாருக்கு விரிவான அறிவுரைகளை வழங்கினார். அவர் தேர்தல் காலத்தில் சட்டம் -ஒழுங்கை உறுதியாக பேணுதல், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், மற்றும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு விழிப்புடன் செயல்படுதல் குறித்து வலியுறுத்தினார். மேலும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடித்து, பொது மக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுமாறும் அறிவுறுத்தினார். அப்போது காவல் நிலையத்தின் செயல்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.




















