தென்காசி: தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய முக்கிய வழக்குகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், வழக்குகளை துரிதமாக விசாரித்து விரைந்து முடிக்க காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்.
அதேபோல், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாராட்டும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















