திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வரும் (02.04.2026) அன்று நடைபெற உள்ள பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அடிவாரம் தண்டாயுதபாணி நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், துணை காவல் கண்காணிப்பாளர் தனஜெயன், காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















