மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான
ஆட்சி அமைப்பதற்கான அரசியல் பரபரப்பு தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டதாக கூறப்படும் சூழ்நிலையை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “மக்கள் ஆதரவுடன் உருவான ஆட்சிக்கு எதிராக அரசியல் சதிகள் நடைபெறுகின்றன”, “ஜனநாயகத்தை காக்க வேண்டும்”, “மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















