திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் நவின் (25). இவர் கொலை கொள்ளை போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே போல், திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூரை சேர்ந்த பரமசிவம் மகன் சின்ராசு (23). போக்சோ வழக்கு குற்றவாளி. இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, நாங்குநேரி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மங்கையர்கரசி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார், இ.கா.ப., பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி (04.06.2026) அன்று குண்டர் சட்டத்தின் கீழ் நவின் மதுரை மத்திய சிறையிலும், சின்ராசு பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















