நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்டு அதன் உரியவரிடம் ஒப்படைத்தனர். இவ்வழக்கில் இருசக்கர வாகனத்தை திருடிய சந்திரன் மற்றும் அந்த வாகனத்தை வாங்கிய ராஜா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.




















