திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மணலி புது நகரை அடுத்த விச்சூர் ஊராட்சி உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் இயங்கி வருகிறது. சத்திய சாய் லூப்ரிகன்ஸ் என்ற நிறுவனம் இந்த நிறுவனத்தில் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக க்ரூட் ஆயில் இறக்குமதி செய்யப்பட்டு அதை பார்லர்களில் சேமித்து வைத்து பின்பு இவர்கள் வேறு சிலருக்கு இதை விற்பதாக கூறப்படுகிறது. இந்த ஆயிளை வாங்குபவர்கள் என்ன காரணத்திற்காக இதை பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து விளக்கம் இல்லை. மேலும் இந்த நிறுவனத்தின் மீது ஒரு வழக்கு இருந்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டதாகவும் இதன் சார்பாக வழக்கு ஒன்று நிலுவையில் இருந்த நிலையில் தற்போது விளக்கு அளிக்கப்பட்டு இந்த நிறுவனம் செயல்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் இன்று காலை 10 மணி அளவில் இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடுமையான புகை மூட்டத்துடன் இந்த ஆயில் நிறுவனம் எறிய தொடங்கியது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறை சார்பாக மணலி புதுநகர் மணலி மற்றும் மாதவரம் எண்ணூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அனைப்பதற்காக வந்தன ஆனால் தீயாகப்பட்டது. கடுமையாக எரிவதால் பார்லர்கள் வெடித்து சிதறுகின்றன இதன் காரணமாக தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் இந்த தீ அருகில் உள்ள நிறுவனங்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. அதேபோல் இந்த நிறுவனம் போல் அருகாமையில் வேறு சில நிறுவனங்கள் இருக்கின்றன அவைகளை நாம் படம்பிடித்தோம். அதாவது எந்தவித தீயணைப்பு சாதனங்கள் இல்லாமல் இது போன்ற நிறுவனங்கள் செயல்படுவது வேடிக்கையாக இருக்கிறது. இவர்களுக்கு எப்படி அனுமதி கிடைக்கிறது இவர்கள் எப்படி இந்த நிறுவனங்களை நடத்துகின்றனர் என்பது தெரியவில்லை. சாலை வசதி இல்லாமல் உள் நோக்கி இந்த நிறுவனங்கள் செயல்படுவதால் இதைப் பற்றி யாரும் கவலைக் கொள்வதில்லை.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















