கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய சரகம், நரிமேடு பாறை கிராமம். சரவணன் என்பவருடைய நிலத்திலும், கூரம்பட்டி கிராமத்திலும் சூதாட்டம் நடைபெறுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், நரிமேடு பாறை கிராமத்தில் தனிப்படையினர் நடத்திய திடீர் சோதனையில், சந்திரன் (52). த/பெ செவத்தான். நரிமேடுபாறை கிராமம், சேகர் (36). த/ பெ சின்னவன், சந்தைபாளையம், வெங்கடேஷ்(60). த/பெ ஆறுமுகம், சவுளுர் கூட்டு ரோடு. மணி (63). த/பெ முனியப்பன், சவுளுர் கூட்டு ரோடு,ராமன் (30). த/பெ கோவிந்தசாமி, ஜமேதார் மேடு.,ராஜா (63). த/ பெ எல்லப்பன். பன்னிஹள்ளி, ஹரிராமன் (26.) த/ பெ உதயண்ணன், அம்பேத்கர் நகர், வாசுதேவன் (46.) த/பெ பெருமாள். இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டது கண்டறியப்பட்டு, அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து, பணம் ரூபாய் 18, 850/-, இருசக்கரவாகனங்கள்-7. கைபேசிகள்-8 ஆகியவைகள் கைப்பற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்