திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆதம்நகரை சேர்ந்த பரமசிவம்(55) இவர் மண் விளக்கு தயாரிப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் வேடசந்தூரிலிருந்து கோவிலூர் ரோட்டில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சின்னராவுத்தன்பட்டி பிரிவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது இது இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















