கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் ,சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ESI ரிங் ரோடு லயன் கிளப் பஸ் நிறுத்தம் , ESI ஜங்ஷன் பிரியா கிளினிக் ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் மூன்று நபர்கள் சேர்ந்து அவ்வழியாக வந்த நபர்களிடம் செல்போன்களை கேட்டு மிரட்டியதாகவும், அவர்கள் தர மறுத்ததால் அவற்றை பறித்து சென்றதாகவும் மணி மற்றும் கணேஷ் என்பவர்கள் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து, அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் ஒன்று , ஆறு செல்போன்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிந்து மூன்று குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















