திருநெல்வேலி : (15.08.2025) 79-வது சுதந்திர தின விழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இவ்விழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நாளை தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தும் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையின் அணி வகுப்பு மரியாதைக்கான ஒத்திகை (14.08.2025) காலை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சதீஷ் கண்ணன்(Training) அவர்கள் தலைமையில் காவல்துறை அணிவகுப்பு மிக கம்பீரமாக நடைபெற்றது. இந்த காவல்துறையின் அணிவகுப்பை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்கள் ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார்.