திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நான்கு நபர்களை துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 456 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



















