திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான புலிவலம் OASYS கல்லூரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் அவர்களின் தலைமையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, வாக்கு எண்ணிக்கை பணிகள் சீராக நடைபெற உறுதி செய்தனர்.


















