மதுரை: மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கலந்து கொண்டு மே தினக் கொடியேற்றி ஊழியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் ஜெயமுருகன் வரவேற்புரை வழங்க, செயலாளர் சுரேஷ் மருது முன்னிலை வகித்தார். மேலும், அகில இந்திய விமான நிலைய தொழிற்சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி மே தினம் கொண்டாடப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி


















