திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினருக்கு உதவியாக இருந்த ஒரு பெண்ணிடம் மருத்துவமனைக்கு வந்த ஒரு நபர் தவறான முறையில் நடந்து கொண்டதாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை விசாரணை மேற்கொண்டு தென்காசி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த அவசர ஊர்தி ஓட்டுநர் பாஸ்கர்(49). என்பவரை கைது செய்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது எவ்வித பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















