திருவள்ளூர் : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் நேரடி கண்காணிப்பில் துவக்கப்பட்ட சிங்கப்பெண் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செங்குன்றம் சரகத்திற்கான காவலர் படை இன்று மீஞ்சூரில் உதவி ஆய்வாளர் திரு ஜெயந்தி அவர்களின் தலைமையில் அரியன் வாயல் அரசு நடுநிலைப்பள்ளி அரியன்வாயில் பஜார் மற்றும் மீஞ்சூர் பஜார் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமும் பெண்களிடமும் பள்ளி மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சமூக விரோதிகள் தொந்தரவுகள் ஏற்படும் போது காவல்துறை அணுக வேண்டிய அவசியம் முறைகள் உள்ளிட்ட இவற்றை விளக்கி கூறி பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தினர் இதில் மீஞ்சூர் காவல்துறையினர் மீஞ்சூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு உறுப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் அபூபக்கர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















