திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் இன்று (29.07.2026) திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் “சிங்கப்பெண் அதிரடிப்படை” சார்பில் ஆம்பூர் தக்ஷிலா குளோபல் மெட்ரிக் பள்ளி , ஆம்பூர் துத்திபட்டு ஹிட்ராச் ஷூ கம்பெனி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு, 1091 ,1930,181 மற்றும் 1098 உதவி எண்கள், காவலன் உதவி செயலி, இணையவழி மோசடி தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு , கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களின் எதிர்காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




















