கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேட்டியம்பட்டி கோபி கவுண்டர் கொட்டாய் அருகே உள்ள ஆஞ்சேரி மலை அடிவாரத்தில், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையின் போது சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் வைத்திருந்த நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 100 லிட்டர் ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அவற்றை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து போலீசார், இரண்டு குற்றவாளிகளையும் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















