கிருஷ்ணகிரி: மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளி to ஓசூர் ரோடு, கொத்தஜிகூர் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 12 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















