திண்டுக்கல்: திண்டுக்கல், சீலப்பாடியை அடுத்த கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த அங்கமுத்து மனைவி சித்ரா(42). இவர் மில்லில் கூலி வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் இவர் மின் கம்பத்திலிருந்து வீட்டிற்கு EB லைன் எடுத்து செல்ல ஊன்றி இருந்த இரும்பு கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















